Saturday, 8 April 2017

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..!

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..! 


சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!


இல்லறஉறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தரஇயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல்போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

காரணங்கள்: 

ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.

தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.

சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.

துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.

நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.

தவிர்க்க வேண்டியவை:

அதிககாரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

விந்தணுவை அதிகரிக்க உதவும் 10 உணவுகள்

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம்.

மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும். இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!

பூண்டு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் விட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.

மாதுளை சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.

வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.

பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து, விந்தணுவில் உள்ள DNA- டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரி

Wednesday, 5 April 2017

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை...

தலைவலி, ஜலதோஷம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்ளாமல் சில எளிய மசாஜ்கள் செய்வதன் மூலம் கூட அதை சரி செய்ய முடியும்

30 நொடிகளிலிருந்து 1 நிமிடம் வரை இதை செய்தாலே போதும் உடனடி பலன் கிடைக்கும்.

முதல் வழி


கண்களின் இரண்டு புருவத்துக்கு நடுவில் இருக்கும் நெற்றி பொட்டில் கை வைத்து மசாஜ் செய்தால் தலைவலி குறையும். அதனுடன் கண்ணில் ஏற்ப்படும் சோர்வும் சரியாகும்.

இரண்டாம் வழி


கண்களின் புருவத்துக்கு கீழே உள்ள பகுதிகளின் இரு முனையிலும் 1 நிமிடத்துக்கு மசாஜ் செய்தால் ஜலதோஷம் சரியாவதுடன் கண்களின் காட்சி கூர்மையும் பிரகாசமாகும்.

மூன்றாம் வழி


மூக்கின் கீழே இரு பக்கங்களிலும், சரியாக பள்ளம் விழும் இடத்தில் அழுத்தினால் தலைவலி, பல்வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தீரும்.

நான்காம் வழி

பின்பகுதி கழுத்தின் கீழே முதுகு ஆரம்பமாகும் இடத்தில் கை வைத்து மசாஜ் செய்தால் கண் வலி, கடுமையான தலைவலி மற்றும் காது வலி குணமாகும்.

ஐந்தாவது வழி

காதில் மேல் வாக்கில் முடி ஆரம்பமாகும் இடத்தில் கை வைத்து மசாஜ் செய்தால் கண்களில் ஏற்ப்படும் சோர்வு சரியாகும்.

ஆறாவது வழி


கைகளின் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இருக்கும் இடத்தில் கை வைத்து அழுத்தி மசாஜ் செய்தால் முதுகு வலி, பல் வலி, கழுத்து தசை வலி போன்றவைகள் குணமாகும்.

Tuesday, 4 April 2017

கைகளில் உள்ள கருமையைப் போக்க இலகுவான வழிமுறைகள்!

கைகளில் உள்ள கருமையைப் போக்க இலகுவான வழிமுறைகள்!

சூரியக்கதிர்களின் தாக்கத்திற்கு உட்படும் உடலுறுப்பு எதுவென்று கேட்டால் , கைகள் என்பதுதான் விடையாக இருக்கும் . அந்தளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் கைகளானது கருமையடைந்துவிடுகின்றன. மேலும் நம் கைகளைப் பார்த்தால் நமக்கே அடையாளம் தெரியாது. அதுமட்டுமின்றி முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இத்தகைய கருமையைப் போக்க வேண்டுமானால் கைகளுக்கும் சரியான பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது. அதுவும் எப்படி முகத்திற்கு மாஸ்க், ஃபேஷியல், கிளின்சிங் போன்றவற்றை செய்கிறோமோ அதேப் போன்று கைகளுக்கும் செய்ய வேண்டும். இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்க உள்ள வழிமுறைகளை பார்க்கலாம்….

* கருமையை நீக்கும் பப்பாளி


பப்பாளியில் கிளின்சிங் தன்மை இருப்பதால் இதன் ஒரு துண்டைக் கொண்டு தினமும் கைகளை தேய்த்து, ஊற வைத்து கழுவி வந்தால், கைகளில் உள்ள கருமையானது படிப்படியாக நீங்கிவிடும். அதேபோன்று பாலும் சருமத்தில் கருமையைப் போக்க உதவும் ஒரு சிறந்த பொருள். அதற்கு காய்ச்சாத பாலை தினமும் குளிக்கும் முன், தடவி ஊற வைத்து, நீரில் பருத்தித்துணியை நனைத்து துடைத்துவிட்டு, பின் குளிக்க செல்ல வேண்டும்.


* கற்றாழை ஜெல்லில் நீங்கும் கருமை


கற்றாழை ஜெல்லில் சிறிது வெள்ளரிக்காய் சாறு அல்லது உருளைக்கிழங்கு சாறு சேர்த்து, கருமையான இடங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். அதுமட்டுமின்றி, இந்த முறையை வெளியே செல்லும் முன்பு செய்துவிட்டு சென்றால், கைகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

* எலுமிச்சையும் நல்ல நிவாரணி


எலுமிச்சை சாற்றில் ப்ளீச்சிங் தன்மை இருந்தால், அந்த எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் தவறாமல் செய்து வந்தால், கைகள் படிப்படியாக கருமை நிறம் மறைந்து வெண்மை நிறமடைவதை காணலாம். மேலும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சம அளவு எடுத்து, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, கைகளில்தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ச்சியான நீரில் கழுவினால் அவற்றில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கைகளில் உள்ள கருமை நிறமானது மங்கும். இதை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* இரவு நேரத்தில் கடலைப் பேஸ்ட்


கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். இப்படி பேஸ்ட் செய்தவர்கள் அதனை இரவு நேரங்களில் பூசுவதால் அதிக பலன் கிடைக்கும் . ஏனெனில் பகலில் பூசினால், பின்னர் வெயிலில் செல்லும் போது மீண்டும் தாக்கத்திற்கு உள்ளாகலாம். ஆனால் இரவில் பூசினால் மீண்டும் கையில் வெயில் பட நீண்ட நேரமாகும் என்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

பேரீச்சம்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா?

வேகமா பகிருங்கள்: பேரீச்சம்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா?


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பேரீச்சம். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.

இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

 பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்குபடுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.



மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும்.

மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும்.

இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள்.



இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள் :-

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது.

ஆண்மையைப் பெருக்கும் அமுக்கிரா கிழங்கு !!


ஆண்மையைப் பெருக்கும் அமுக்கிரா கிழங்கு !!



ஆண்மையைசெயல்பட வைக்கும் மூலிகை வேர்தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.

ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும்.இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை “வயாக்ரா” சொன்னால் அது மிகையாகாது.அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும்.

உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை இது தீர்க்க உதவும். இது உடலின் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல்பாட்டினை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.